New User ? Register   |   Login     

கொற்கை

Email
கடல்வாழ் மக்களின் கதையை எடுத்துக்கூறும் வகையில் இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது முத்துக்குப் பெயர்பெற்ற இப்போதைய தூத்துக்குடி
விலை: ரூ.975.00

நூலைப் பற்றி

கடல் வாழ் மக்களின் கதையை எடுத்துக் கூறும் வகையில் இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்த போது முத்துக்குப் பெயர் பெற்ற இப்போதைய தூத்துக்குடி கொற்கை துறைமுகத்தில் 1914-ல் தொடங்கும் கதை, 2000-ம் ஆண்டில் நிறைவு பெறுவதைப் போல எழுதியுள்ளார். முழுவதும் கடல் சார்ந்தும் கடல்நீர், உப்புக்காற்று, மீன்வாசனை, முத்துவணிகம், கப்பல்வணிகம், கொற்கையில் பிரசித்தி பெற்று விளங்கிய தொழில்கள் ஆகியவை இந்த நாவலில் அழகுற இடம் பெற்றுள்ளன.

இது மட்டுமன்றி, நாவலில் இடம் பெறும் காலத்தில் கொற்கையிலிருந்த ஆங்கிலேயர்கள், கத்தோலிக்கப் பிரதிநிதிகள், அரசியல் சூழல்கள் ஆகியவற்றை உள்ளடக்கி எண்ணற்றக் கதாபாத்திரங்களுடன் கொற்கையை நமது கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.